Skip to main content

Posts

Showing posts from March, 2020

சாதிகள் வரலாறு

 சாதிகள் வரலாறு என்ற தலைப்பை என் வலையில் இட்டதன் காரணம் சாதிகளின் பெயரைச் சொல்லி மற்றவர்களை இழிவுபடுத்தவோ அல்லது தாழ்மைப்படுத்தவோ அல்ல. உண்மையில் சாதிகள் என்றால் என்ன? அது எவ்வாறு தோன்றியது? என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கமே காரணமாகும். இன்றும் பலர் சாதிகளின் பெயர்களைச் சொல்லி சண்டையிடுவதை காண்கிறோம். இவை சரிதானா? இனி வரும் சந்ததியினரும் இதைத் தொடர வேண்டுமா? அக்காலத்தில் சாதிகள் என்பது  நம் முன்னோரின் தொழில், வாழ்க்கை முறை, புகழ் அல்லது பட்டம் போன்றவற்றுள் ஏதேனும் ஒன்றை தெரியப்படுத்தும் காலக் கண்ணாடியாகத் திகழ்ந்தது. இன்று அவையே வேரூன்றி ஆலமரம் போல் அசைக்க முடியாமல் மனித சமூகத்தில் வேற்றுமையைக் காட்டும் சாதிகளாக நடமாடி வருகின்றன. இதில் உயர்ந்தவர் என்றோ தாழ்ந்தவர் என்றோ பிரித்துப் பார்ப்பதற்கு எதுவும் இல்லை. எனவே சாதிகளை நாம் பார்க்கும் கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். ஏனென்றால் சாதிகள் ஏற்றபட்ட காலத்தில் அவை பிறப்பை மையமாகக் கொண்டு அமையவில்லை அவர்கள் செய்யும் தொழிலைக் கொண்டே அமைந்தது. மற்றும் அவை ஒருவனுக்கோ அல்லது ஒரு சமூகத்துக்கோ நிரந்தரமாகவும் அமைந்தவை...